சம நீதி, சமூக நீதி சமைப்போம்...
மார்க்சிய - அம்பேத்கரிய - பாதையில்!
அரசாங்கம் எப்போதும் முதலாளியின் பக்கமே!
தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கம் குறித்து 1930களில் அம்பேத்கர் கூறியதாவது:
வேலை ஒப்பந்த மீறல் என்பது சற்று அச்சமூட்டுகிற வேலைநிறுத்தம் என்னும் சொல் லின் நயமிக்க வருணனையே. வேலை ஒப்பந்தத்தை மீறுவது குற்றமல்ல. ஒரு மனி தனை அவனது விருப்பத்திற்கு மாறாக பணியாற்றும்படி கட்டாயப்படுத்துவது அவனை அடிமையாக்குவதற்கு ஒப்பானது. வேலை நிறுத்தம் என்பது சுதந்திர உரிமையின் மற்றொரு பெயர். எப்போதுசுதந்திர உரிமையை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ, அப்போதே வேலைநிறுத்தத்திற்கான உரிமையை நாம் ஏற்றுக் கொண்டவர்களாகிறோம்.
வேலை நிறுத்தங்கள் என்பவை தொழிலாளர்கள் இயல்பாகவே ஒன்று சேர்வதாகும். தொழி லாளர்கள் தங்களது சொந்த பாதுகாப்பின் பொருட்டு ஒன்று சேரும் உரிமை பெற்று இருக்கிறார்கள். வேலை நிறுத்தத்தை தொடர்ந்து நடத்துவது சட்டவிரோதமாகாது ஏனென் றால் அது கூட்டு நடவடிக்கையாகும். தொழிற் துறையில் அமைதி நிலவுவதற்கு தொழிலாளி தனது எஜமானனிடம் அடிமைப்பட்டு கட்டுண்டுதான் கிடக்கவேண்டுமென்றால் என்னைப் பொருத்தவரை இந்த அமைதி தேவையில்லை.
இந்த அமைதி பசி, பட்டினி அறியாத வயிறும், பொத்தானைத் தொடும் தொந்தியும் கொண்ட மனிதனுக்குரிய அமைதியே ஆகும் என்கிறார்.
பணக்காரர்களை பொறுத்தவரை அவர்கள் எந்த விஷயத்துக்கும் அரசாங் கத்தை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. ஏழைகளுக்குத்தான் அரசாங்கத் தின் உதவி வேண்டும். இதற்கான நிதியை பணக்காரர்கள் மீது வரி விதிப்பதன் மூலம் திரட்ட வேண்டும். சமூகம் முழுவதும் பயன்படுத்தும் பல பொதுநலத்துறைகள் தனியார்களிடம் உள்ளன. இவற்றை தேசவுடமை யாக்கி சமூகம் முழுவதின் நன்மைக்காக ஏன் பயன்படுத்தக்கூடாது.
புதிய வரிகள் விதிக்காததால் மட்டும் ஒரு பட்ஜெட் நல்ல பட் ஜெட் அல்ல. பணக்காரர்கள் மீது வரிவிதிக்க அஞ்சும் பட்ஜெட் பணக்காரர்களின் பட் ஜெட்டே. ஏராளமான வசதிகள் கொண்ட செல்வந்தர்களே தனது சொந்த வகுப்பாரின் நன்மைக்காக அரசியல் அதிகாரத்தை கைபற்றிவிடக்கூடாது என்கிறார்.
எனவே சாதியமும், முதலாளியமும் இந்தியாவின் வளர்ச்சிக்கு விரோதிகள்என்று கூறும் அம்பேத்கர் போற்றுதலுக்குரிய வர் மட்டுமல்ல, இந்தியச் சூழலில் முதலாளி யத்திற்கு எதிரான ஒரு போர் ஆயுதமும் ஆவார்.
ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த தினம்