மனுசனைப் பாத்திட்டு உன்னையும் பாத்தாமாற்றமில்லேடா ராஜா-எம்மனசிலே பட்டதை வெளியிலே சொல்றேன்வந்தது வரட்டும் போடா....சில
உள்ளதைச் சொன்னா ஒதைதான் கெடைக்கும்ஒலகம் இதுதாண்டா... ராஜா ஒலகம் இதுதாண்டாஉள்ளத் துணிவோட பொய் சொல்லுவோர்க்கு உல்லாச புரிதாண்டா இதுஉல்லாச புரிதாண்டா.....
வசதியிருக்கிறவன் தரமாட்டான்- அவனை வயிறு பசிக்கிறவன் விடமாட்டான் (வசதி)வானத்தை வில்லா வளைச்சுக்காட்டுறேன்னுவாயாவே சொல்லுவான் செய்யமாட்டான்
பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்பயணம் போறேண்டா- நான்பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்பயணம் போறேண்டா
ஒரு சிறுவன்: அங்கே நானும் வாரேண்டா....வெளியே படிக்க வேண்டியது நெறய இருக்குபடிச்சிட்டு வாரேண்டா-சிலர்படிக்க மறந்தது நெறய இருக்குபடிச்சிட்டு வாரேண்டா....
எழுதிப் படிச்சு அறியாதவன் தான்உழுது ஒளச்சு சோறு போடுறான்.....எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசிநல்லா நாட்டைக் கூறு போடுறான்-இவன் சோறு போடுறான்- அவன்கூறு போடுறான்.-
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்