சேலம் மாவட்ட FORUM முடிவின்படி மாநில தலைவர்களை வைத்து சிறப்பு கூட்டம், சேலத்தில் 17.04.2015 அன்று சிறப்பாக நடை பெற்றது.
கூட்டத்திற்கு தோழர்கள் தமிழ்மணி (BSNLEU ) வெங்கட்ராமன் (NFTEBSNL )
சம்பத் (SNEA ) கணபதி (AIBSNLEA )கூட்டு தலைமை தாங்கினார்கள் .
FORUM கண்வீனரும் BSNLEU மாவட்ட செயலுருமான தோழர் E. கோபால் அனைவரையும் வரவேற்று கூட்ட நோக்கங்களை விளக்கி பேசினார் .
தோழர் K.G. நாராயணகுமார் SNEA மாநில செயற்குழு உறுப்பினர், தோழர் சென்னகேசவன், NFTEBSNL மாநில துணை செயலர், சிறப்புரை வழங்க,
FORUM தமிழ் மாநில கன்வீனரும், BSNLEU அகில இந்திய உதவி பொது செயலுருமான தோழர் S செல்லப்பா, போராட்ட விளக்க சிறப்புரை வழங்கினார். அரசாங்க கொள்கைகள், BSNL நிலை, மேல் மட்ட நிர்வாக சீர்கேடுகள், போட்டி சூழல், போராட்ட காரணங்கள் , நடைபெற்ற பேச்சு வார்த்தைகள், ஊழியர் -அதிகாரிகள், ஒற்றுமை, பல சங்கங்கள், அமைப்புகள், அதரவு என சிறப்பான ஒரு உரை வழங்கினர்.
பின்னர் தோழர் P . வேணுகோபால், அகில இந்திய தலைவர், AIBSNLEA, சிறப்புரை வழங்கினார் .
இறுதியாக சேலம் மாவட்ட FORUM தலைவரும், NFTEBSNL மாவட்ட செயலுருமான தோழர்
C . பாலகுமார், அணைத்து அலுவலகங்களும் , தொலைபேசி நிலையங்களும், 2 நாட்களும் இழுத்து மூட பட வேண்டும், ஊழியர்கள் அனைவரும் விடுப்பு எடுக்காமல், முழுமையாக போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என பேசி, நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
மாவட்டம் முழுவதுளுமிருந்து 250 க்கும், மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.