அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
அகில இந்திய அளவில் நடைபெற்ற ஏப்ரல் 21,22 வேலைநிறுத்தம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. சென்னையில் வேலை நிறுத்தம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வேலை நிறுத்தத்தை சீர்குலைக்கும் வேலைகளை அமுதவாணன் போன்ற சிலர் முயற்சி செய்தனர். எனினும் நமது தோழர்கள் மிகவும் கவனமாக வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கியுள்ளனர். ஆனால் அமுதவாணன் காவல் துறையில் நமது தலைவர்கள் Forum கன்வீனர் S.செல்லப்பா Forum தலைவர் R.பட்டாபிராமன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது பொய்புகார் கொடுத்துள்ளார். அதன் விசாரனைக்காக நமது தலைவர்களை காவல் துறை திங்கள் கிழமை (27.04.2015) அன்று அழைத்திருக்கிறது. பல பொய்புகார்களை இதற்கு முன் சந்தித்திருக்கிறோம். இந்த பொய்புகாரையும் எதிர்கொள்வோம். நமது போராட்டங்களை தகர்க்க முயலும் எந்த சக்தியையும் அனுமதியோம்.
Forum மிகவும் ஒற்றுமையாக இந்த பொய்புகாரை சந்திக்கும். தவிடுபொடியாக்கும்..இயக்க மாண்பை காக்க... CGM அலுவலகம் முன்பு.. பெருந்திரள் பட்டினிப்போர்..
இது குறித்த மாநில Forum வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினை காண இங்கே கிளிக் செய்யவும்
<<<Read>>>