Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, April 10, 2015

சேலம் மாவட்ட FORUM கூட்டம் - முடிவுகள்



சேலம் மாவட்ட FORUM கூட்டம் 09.04.2015 அன்று நடைபெற்றது. கூட்டதிற்க்கு FORUM அமைப்பின் தலைவரும் NFTEBSNL மாவட்ட செயலுருமான தோழர் C பாலகுமார் தலைமை தாங்கினார்.  

FORUM அமைப்பின் கன்வீனறும், BSNLEU மாவட்ட செயலுருமான தோழர் E. கோபால், அனைவரையும் வரவேற்று கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி பேசினார். 

NFTEBSNL சார்பாக தோழர் G. வெங்கட்ராமன், மாநில அமைப்பு செயலர், தோழர் S. சின்னசாமி, மாவட்ட தலைவர், BSNLEU சார்பாக தோழர் C. செந்தில்குமார், மாவட்ட பொருளர், தோழர் M. பன்னீர்செல்வம், மாவட்ட அமைப்பு செயலர், SNEA சார்பாக தோழர் S.M. ரஹீம்தீன், AIBSNLEA சார்பாக 
தோழர் M. ஷண்முக சுந்தரம், மாவட்ட செயலர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கபட்டது. 

1. அனைத்து கிளைகளிலும் FORUM அமைப்பை கூட்டி, வேலை நிறுத்த தயாரிப்பு பணிகளில் ஈடுபடுவது. 

2. 2000 நோட்டீஸ், 100 சுவரொட்டி, அச்சடித்து விநியோகிப்பது. 

3. 17.04.2015 அன்று  சேலம் MAIN தொலைபேசி நிலயத்தில், சிறப்பு கருத்தரங்கம் மாநில தலைவர்களை வைத்து நடத்துவது. 

 4. மாவட்டம் முழுவதும் உள்ள ஊரக கிளைகளில் 15, 16 தேதிகளில் அனைத்து மாவட்ட செயலர்களும் விஜயம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபடுவது.  

5. 17.04.2015 அன்று மதியம் பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம் நடத்துவது. 

6. 18.04.2015 அன்று சேலம் நகர கிளைகளில் ஊழியர்களை சந்தித்து பிரச்சாரம் செய்வது. 

7. எஞ்சியுள்ள அனைத்து சங்கங்களையும் / அமைப்புகளையும் தோழமையுடன் அணுகவது. போராட்டத்திற்க்கு ஆதரவு கோருவது. 

8. FORUM அமைப்பின் அடுத்த கூட்டம் 18.04.2015 மாலை 5 மணிக்கு நடத்துவது. 

தோழமையுடன் 
E. கோபால், கன்வீனர், FORUM 
மற்றும் மாவட்ட செயலர் BSNLEU