Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, May 27, 2015

செப். 2 வேலை நிறுத்தம் - மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல்.





மத்திய அரசின் தொழிலாளர் நல விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து வரும் செப்டம்பர் 2 அன்று அகில இந்திய வேலை நிறுத்தம் நடத்திட மத்தியத் தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.
சிஐடியு, ஏஐடியுசி உட்பட 13 மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்புகளின் சம்மேளனங்கள் பங்கேற்ற தொழிற் சங்கங்களின் சிறப்பு மாநாடு 26.05.15 செவ்வாய்க்கிழமை புதுதில்லி, மாவலங்கார் அரங்கில் நடைபெற்றது.

சிஐடியு அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்மநாபன், பொதுச் செயலாளர் தபன்சென் எம்.பி, ஏஐடியுசி பொதுச் செயலாளர் குருதாஸ் தாஸ் குப்தா எம்.பி., உட்பட மத்திய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் இச்சிறப்பு மாநாட்டில் பங்கேற்றார்கள். குறைந்தபட்ச ஊதியம் 15 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் மற்றும் சமூக நலத்திட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என்கிற தங்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்பதுடன் தற்போது தொழிலாளர் நலன்களுக்கு விரோதமான முறையில் தொழிலாளர் சட்டங்களை மாற்றும் முயற்சிகளிலும் இறங்கியுள்ளது.இதனைக் கண்டித்து வரும் செப்டம்பர் 2 அன்று அகில இந்திய அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதென்று சிறப்பு மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. 

26-05-2015 அன்று 11 மத்திய  தொழிற்சங்கங்கள் பங்கேற்ற  இக் கருத்தரங்கில் நமது BSNLEU சங்கம் சார்பாக நமது பொது செயலர் தோழர் P அபிமன்யு , தலைவர் தோழர் பல்பீர் சிங் மற்றும் துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி  ஆகியோர் பங்கேற்றனர் .மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கினை எதிர்த்தும் , கார்பரேட்களுக்கு ஆதரவான மத்திய அரசின் போக்கை கண்டித்தும்    வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி பொது வேலை  நிறுத்தம் செய்வது என முடிவு அக் கருத்தரங்கில் எடுக்கப்பட்டு உள்ளது . நமது சங்கம் அம் முடிவை இதய பூர்வமாக ஏற்று கொண்டு உள்ளது .