Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, May 29, 2015

இரும்பாலையில் இனியமையான ஓர் விழா


BSNLEU மற்றும் SNEA ( I ) சேலம் மாவட்ட சங்கங்கள் சார்பாக இனிமையான ஓர்  விழா  இரும்பாலையில் நடத்தப்பட்டது. ஆம், 28.05.2015 அன்று சரவணா திருமண மண்டபத்தில், (சித்தனூர் , இரும்பாலை வழி, சேலம்) SNEA மாநில உதவி செயலர் தோழர் R . வீரமுத்து மற்றும் BSNLEU இரும்பாலை கிளை செயலர் தோழர் R . ஆறுமுகம், இணைந்த பணி நிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடை பெற்றது. 

BSNLEU  மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மற்றும் SNEA மாவட்ட செயலர் தோழர் M .R . தியாகராஜன் கூட்டு தலைமை ஏற்றனர். 

SNEA அகில இந்திய நிதி செயலர் தோழர் ராஜன், SNEA மாநில செயலர் தோழர் கோபிநாத், SNEA மாநில பொருளர் தோழர் ஊமை ஜெயராமன், BSNLEU தமிழ் மாநில செயலர் தோழர் S . தமிழ்மணி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். 

அதே போல், NFTEBSNL தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் G. வெங்கட்ராமன், சேலம் மாவட்ட செயலர் தோழர் C . பாலகுமார், மாவட்ட பொருளர் தோழர் காமராஜ் நிகழ்வில் பங்கேற்றனர். 

SNEA சார்பாக அதன் மாநில சங்க நிர்வாகிகள் தோழர் ஜெயபிரகாஷ், தோழியர் தமிழ்ச்செல்வி, BSNLEU சேலம் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர் செந்தில்குமார், ஹரிஹரன் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினார்கள். 

இரண்டு சங்கங்கள் சார்பாக மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி ஊழியர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், இறுதியாக, தோழர் R . வீரமுத்து, ACS , SNEA  மற்றும் தோழர் R . ஆறுமுகம், B /S , BSNLEU ஏற்புரை வழங்கினார்கள். SNEA  மாவட்ட பொருளர் தோழர் G. சேகர், நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. 

ஒய்வு பெற உள்ள இரண்டு தோழர்களும் அணைத்து விருந்தினர்களுக்கும் சிறப்பான ஒரு மதிய விருந்து வழங்கினார்கள். இரண்டு தோழர்களின் உறவினர்கள், நண்பர்கள், மண்டபம் நிரம்பும் அளவுக்கு கலந்து கொண்டது நிகழ்வின் சிறப்பம்சமாகும். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்