Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, June 16, 2015

ஜூன்-15 முதல் இந்தியா முழுவதும் ரோமிங் இலவசம்.



நாடு முழுவதும், BSNL., மொபைல் போன் வாடிக்கையாளர்கள், 15.06.2015 முதல், 'ரோமிங்' கட்டணமின்றி, அழைப்புகளை ஏற்கலாம் என, அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து, BSNL., தலைமை மேலாண்மை இயக்குனர் அனுபம் ஸ்ரீவஸ்தவா, 14.06.2015 அன்று  வெளியிட்ட அறிக்கை விவரம்:

ரோமிங் கட்டணத்தை தவிர்க்க, BSNL., வாடிக்கையாளர்கள் பல சிம் கார்டுகளையும், ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் போன்களையும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை. வெளி மாநிலங்களுக்கு செல்லும் BSNL., வாடிக்கையாளர்கள், ரோமிங் கூடுதல் கட்டண பயமின்றி, தமக்கு வரும் மொபைல் போன் அழைப்புகளை ஏற்று, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்.

இதன் மூலம், 'ஒரு தேசம்; ஒரு எண்' என்ற கனவு, நனவாகி உள்ளது. இவ்வாறு, அனுபம் ஸ்ரீவஸ்தவா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது