03.06.15 அன்று சென்னை, கிண்டி CITU அலுவலகத்தில், மாநிலத் தலைவர் தோழர்.எஸ். செல்லப்பா அவர்களின் தலைமையில் நமது BSNLEU தமிழ் மாநில செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
நமது சங்க கொடியை அகில இந்திய பொதுச் செயலர் தோழர்.பி. அபிமன்யு ஏற்றிவைத்து செயற்குழு கூட்டத்தில் துவக்க உரை நிகழ்த்தினார். அஞ்சலி உரையை தோழர். வெங்கட்ராமன் நிகழ்த்த, வரவேற்ப்புரையை தோழர்.கே.சீனுவாசன் நிகழ்த்திய பின்னர், மாநிலசெயலர் தோழர் எ.பாபுராதா கிருஷ்ணன் அறிக்கைவைத்து அறிமுக உரை நிகழ்த்தினார்.
நமது மாவட்ட செயலர் தோழர். E . கோபால், உள்ளிட்ட அனைத்து மாவட்ட செயலர்களும் விவா தத்தில் பங்கேற்றனர்.
நடந்து முடிந்த ஏப்ரல்-21 &22 போராட்டம், செப்டம்பர்-2 அகில இந்திய வேலைநிறுத்தம், ஜூன்-10 ஒப்பந்த ஊழியர் பெருந்திரள் தார்ணா உட்பட அனைத்து ஆய்படு பொருள்களின் மீது ஆழமான விவாதத்தை நடத்தி எதிர்கால திட்டம் குறித்து முடிவெடுத்தது செயற்குழு.
கையெழுத்து இயக்கம், போராட்டம் போன்ற பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு செயற்குழு பாராட்டுகளை தெரிவித்தது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்