Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, June 23, 2015

திருச்செங்கோடு இணைந்த கிளை மாநாடு

திருச்செங்கோடு நகர மற்றும் ஊரக கிளைகளின் இணைந்த கிளை மாநாடு, 21.06.2015 அன்று வெகு விமர்சையாக நடைப்பெற்றது. காலை 9 மணிக்கு துவங்கிய மாநாட்டிற்கு, தோழர்கள் V . நாராயணன், K . செல்வராஜ், கூட்டு தலைமை தாங்கினர் . தோழர் S . தங்கராஜ், சங்க கொடி ஏற்றினார்.

மாநாட்டை தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர் துவக்கி வைத்து உரையாற்றினார். தோழர் E . கோபால், மாவட்ட செயலர், தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி செயலர் சிறப்புரை வழங்கினார்கள்.

NFTEBSNL மாவட்ட தலைவர் தோழர் S . சின்னசாமி, கிளை செயலர் தோழர் சதாசிவத்துடன், கலந்து கொண்டு, வாழ்த்துரை வழங்கினார். 

ஆண்டறிக்கை, வரவு செலவு கணக்கு சமர்பிக்கபட்டு, ஏற்றுகொள்ளப்பட்டது.

நிர்வாகிகள் தேர்வு ஏக மனதாக நடை பெற்றது. திர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

கிழ்க்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தேடுக்கபட்டனர். அதன்படி
தோழர்கள் V . நாராயணன், M . ராஜலிங்கம், S . தங்கராஜ், நகர கிளை தலைவர், செயலர், பொருளராகவும், தோழர்கள் S . ரங்கசாமி, K . ராஜன், M . சிவகுமார், ஊரக கிளை தலைவர், செயலர், பொருளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

புதியதாக தேர்தெடுக்க பட்ட நிர்வாகிகளை, தோழர்கள் P . தங்கராஜ், M . சண்முகம், மாவட்ட உதவி செயலர்கள், V . பரந்தாமன், (பள்ளிபாளையம்), G . நாராயணன், (இடைப்பாடி ), கிளை செயலர்கள் வாழ்த்தி பேசினர் .

இறுதியாக, தோழர் G . விஜய்ஆனந்த், மாவட்ட உதவி பொருளர் நன்றி கூறி மாநாட்டை முடித்து வைத்தார்.

புதியதாக தேர்தெடுக்க பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்