17.06.2015 அன்று ஏற்காட்டில் கிளை மாநாடு எழுச்சியுடன் நடை பெற்றது. மூத்த தோழர் A . இளங்கோவன், Sr .TS (O ) தலைமை தாங்கினார். சங்க கொடியை மற்றுமொரு மூத்த தோழர் N . M . நஞ்சப்பன், TM கோஷங்களுக்குகிடையை ஏற்றி வைத்தார்.
தோழர் R . சுப்பிரமணியன், TM வரவேற்புரை நல்கினார்.
குஜராத் மாநில செயலர் தோழர் A .H.பட்டில், அகால மரணத்திற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது .
மாவட்ட செயலர் தோழர் E . கோபால், துவக்க வுரை வழங்கினார் . அவர் தம் உரையில் 2 நாள் வேலை நிறுத்தம், DoT செயலர் உடன் சந்திப்பு, அரசாங்கத்தின் கொள்கைகள், JAC முடிவுகள், மாவட்ட அளவில் தீர்க்கப்பட்ட பிரச்சனைகள், FORUM முடிவுகள் என அணைத்து விசயங்களையும் விளக்கி பேசினார்.
கிளை செயலர்கள் தோழர்கள் N . பாலகுமார் (GM அலுவலகம்),
P . சம்பத், (மெய்யனூர் OD ), P . செல்வம் (கொண்டலாம்பட்டி), தோழர் R . வேலு, மாவட்ட அமைப்பு செயலர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
P . சம்பத், (மெய்யனூர் OD ), P . செல்வம் (கொண்டலாம்பட்டி), தோழர் R . வேலு, மாவட்ட அமைப்பு செயலர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஏற்காடு உட் கோட்ட அதிகாரி மாநாட்டில் கலந்து கொண்டு, வாழ்த்துரை வழங்கினார். சேவை மேம்பாடு சம்மந்தமான நிர்வாக கருத்துகளை முன் வைத்தார்.
NFTEBSNL கிளை செயலர் தோழர் சந்திரமோகன், மாநாட்டில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
NFTEBSNL கிளை செயலர் தோழர் சந்திரமோகன், மாநாட்டில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
நிர்வாகிகள் தேர்வு ஏக மனதாக நடந்தது. அதன்படி,
கிளை தலைவர் தோழர் R . சுப்பிரமணியன், TM
கிளை செயலர் தோழர் A . இளங்கோவன், Sr.TS(o)
கிளை பொருளர் தோழர் T . சுப்பிரமணியன், TM
புதியதாக தேர்தெடுக்க பட்ட நிர்வாகிகளை தோழர் P தங்கராஜ், மாவட்ட உதவி செயலர் வாழ்த்தி பேசினார்.
சிறப்பான ஏற்பாடு, நேர்த்தியான நிகழ்வுகள் என அசத்திய ஏற்காடு தோழர்களை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.
புதிய நிர்வாகிகளின் பனி சிறக்க தோழமை வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,