செப்டம்பர் 2ந்தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் 20 கோடி பேர் பங்கேற்கவுள்ளனர் என்று அ.சவுந்தரராசன் தெரிவித்தார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கரூரில் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறிய தாவது:-
ஊரக வளர்ச்சி- உள்ளாட்சித் துறையில் பணிநிரந்தரமின்றி தொழிலாளர்கள் ரூ.4 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர். குறைந்தபட்ச சம்பளம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். காலி யாகும் இடங்களிலும் ஒப்பந்த முறையை புகுத்துகின்றனர். குறைந்த கூலிக்கு சுயஉதவிக்குழுவினரைப் பணியமர்த்தி அவர்களையும் தமிழக அரசு ஏமாற்றுகிறது.
அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்த முறையைத் திணிப்பது மிக மோசமான தொழிலாளர் விரோதக் கொள்கை.விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட் டுள்ளனர். ஹோட்டல் பண்டங்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர வில்லை. ஒரு இட்லி ரூ.13க்கு விற்கப்படுகிறது.
தமிழகத்தில் போக்கு வரத்துத் துறை ஊழியர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக கடும் அதிருப்தியில் உள்ளனர். தொழிலாளர்களை அரசு வஞ்சித்துவிட்டது. எந்தநேரமும் பிரச்சனை வெடிக்கலாம். பழைய பேருந்துகளை மாற்று வதில் தாமதம், பராமரிப்பில் தொய்வு, தனியாரை ஊக்குவிப்பது என நிர்வாகம் சீர்கெட்டுவிட்டது.
காவிரி பிரச்சனையில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. நதி நீர் பிரச்சனையில் ஏற்கனவே பெற்றுவந்த அளவுக்கு தண் ணீரை கொடுக்க வேண்டும் என்பது சர்வதேச விதி. இந்த உரிமையை மத்திய -மாநில அரசுகள் பெற்றுத் தர வேண்டும்.
மத்திய, மாநில அரசு களின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித் தும், தொழிலாளர் உரிமை களைப் பாதுகாக்கவும் இந்தியாவிலுள்ள அனைத்து தொழிற்சங்கள், பிஎஸ்என்எல், எல்ஐசி, மத்திய - மாநில அரசு ஊழியர்கள் செப்டம்பர் 2-ஆம்தேதி நாடு தழுவிய பொதுவேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். 20 கோடிக்கும் மேற்பட்ட வர்கள் அதில் பங்கேற்க வுள்ளனர் என்று அவர் கூறினார்.