பதவிகள் பெயர் மாற்றம் கமிட்டி கூட்டம் 28.07.2015 அன்று நடை பெறும் என நமது மத்திய சங்கம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக 14.07.2015 அன்று நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யு புதிய மனித வள இயக்குனர் திருமதி சுஜாதா. T. ராய் அவர்களை சந்தித்து பதவிகளின் பெயர் மாற்ற பிரச்சனைக்கு விரைவான தீர்வு காண வலியுறுத்தினார் .
அதற்கு ஏதுவாக, ஏற்கனவே 09.06.2015 அன்று பதவிகள் பெயர் மாற்ற கமிட்டி தலைவர், திரு. சமீம் அக்தர், Sr . GM (SR ) அவர்களை சந்தித்து, பதவிகள் பெயர் மாற்ற கமிட்டி கூட்டத்தை உடனடியாக கூட்ட வலியுறுத்தினார் என்பது குறிப்பிடதக்கது . புதிய பதவிகள் பெயர் பெற்று தர நமது மத்திய சங்கம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
நமது கோரிக்கைகள் ஏற்கபட்டால், பிரதான கேடர்களான,
01. TTA - Junior Engineer
02. Sr .TOA - Superintendent
03. TM - Telecom Technician
04. RM - Telecom Assistant
என பெயர் மற்றம் செய்யப்படும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
கூட்ட அறிவிப்பு காண இங்கே சொடுக்கவும்