மத்திய மந்திரி சபையின், BSNL விரோத முடிவான துணை டவர் நிறுவனம் அமைக்கும் முடிவை எதிர்த்து FORUM சார்பாக நமது சேலம் மாவட்டம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் 12.08.2015 அன்று சக்தி மிக்க ஆர்பாட்டம் சிறப்பாக நடை பெற்றது.
சேலம் நகர கிளைகள் சார்பாக, MAIN தொலைபேசி நிலைய வாயிலில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
தோழர்கள் செந்தில்குமார் (BSNLEU), வெங்கட்ராமன் (NFTEBSNL), சுப்பிரமணியம் (SNEA), கோவிந்தராஜ் (AIBSNLEA) கூட்டு தலைமை ஏற்றனர்.
தோழர்கள் P .சம்பத் மாவட்ட தலைவர், SNEA , M . சண்முகசுந்தரம் மாவட்ட செயலர், AIBSNLEA, C . பாலகுமார், மாவட்ட செயலர் NFTEBSNL கருத்துரை வழங்கினார்கள்.
இறுதியாக FORUM கண்வீனரும் BSNLEU மாவட்ட செயலுருமான தோழர் E . கோபால், கண்டன சிறப்புரை வழங்கினார்.
ஆர்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
SNEA மாநில சங்க நிர்வாகி தோழர் K .G . நாராயணகுமார் நன்றி கூறி ஆர்பாட்டத்தை முடித்து வைத்தார்.
மாவட்டம் முழுவதும் சிறப்பாக போராட்டம் நடத்திய அத்துனை கிளைகளையும், FORUM நிர்வாகிகளையும் மாவட்ட FORUM சார்பாக மனதார பாராட்டுகிறோம். மாவட்ட FORUMத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
வாழ்த்துகளுடன்,
E . கோபால்,
கன்வீனர், FORUM மற்றும்
மாவட்ட செயலர், BSNLEU