31.07.2015 அன்று மெய்யனுர் தொலைபேசி நிலைய LMR அறையில் மன நிறைவான ஒரு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. ஆம், தோழர் K . பழனியப்பன், STS பணி நிறைவு பாராட்டு விழா தான் அது .
உயர்திரு K . கோவிந்தராஜ், AGM (CSC ) தலைமை தாங்க , திருமதி A . ராஜலக்ஷ்மி, SDE (CSC ) வரவேற்புரை வழங்கினார்.
தோழர் E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU பாராட்டு சிறப்புரை வழங்கினார்.
BSNLEU மாவட்ட சங்க நிர்வாகி தோழர் M . பன்னீர் செல்வம், கிளை செயலர்கள் தோழர்கள் பாலகுமார், செல்வம், காளியப்பன், மெய்யனுர் கிளை தலைவர் தோழர் சேகர், TEPU மாவட்ட செயலர் தோழர் P . கிருஷ்ணமூர்த்தி, தோழர் முருகானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பின்னர் தோழர் K . பழனியப்பன், STS ஏற்புரை வழங்கினார்.
நுற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட இந்த இனிய விழாவை தோழர் தமிழரசன், JAO நன்றி கூறி முடித்து வைத்தார்.