விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு, 14.08.2015 அன்று கோவையில் சிறப்பாக நடை பெற்றது.
தமிழ் மாநில தலைவரும், அகில இந்திய உதவி
தமிழ் மாநில தலைவரும், அகில இந்திய உதவி
பொது செயலுருமான, தோழர் S . செல்லப்பா, தலைமை தாங்கினார்.
தோழர் A . பாபுராதாகிருஷ்ணன், மாநில செயலர், விவாதகுறிப்பை அறிமுகபடுத்தி துவக்க வுரை ஆற்றினார்.
நமது அகில இந்திய பொது செயலர் தோழர் P . அபிமன்யு, செயற்குழுவில் கலந்து கொண்டு, சிறப்புரை ஆற்றினார்.
அவர் தம் உரையில், செப்டம்பர் 2 ஒரு நாள் வேலை நிறுத்த கோரிக்கைகள், நோக்கம், ஊழியர் பிரச்சனைகள், நிறுவன நிலைமை, துணை டவர் நிறுவன அமைப்பு முயற்சி, இரவு நேர இலவச அழைப்புகள், இலவச ரோமிங், FORUM முடிவுகள், தலைமையக நிகழ்வுகள் என பல விஷயங்களை விளக்கி சிறப்புரை வழங்கினார்.
நமது மாவட்டதிலிருந்து பெருவாரியான கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் என பலர் மாவட்ட செயலர் தலைமையில் கலந்து கொண்டனர்.
நமது மாவட்டம் சார்பாக தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர் விவாதத்தில் பங்கு பெற்று நமது மாவட்ட கருத்துகளை எடுத்துரைத்தார்.
மாலையில் நல்ல ஒரு சிறப்பு கூட்டம் நடை பெற்றது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்