Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, August 26, 2015

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்


BSNLEU - NFTEBSNL சங்கங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பு குழு (Steering Committee) நமது மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அக்குழுவின் கூட்டம் 24.08.2015 அன்று NFTEBSNL மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தோழர் S . சின்னசாமி, மாவட்ட தலைவர், NFTEBSNL, தலைமை தாங்கினார். 

ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள், தோழர்கள் E . கோபால், 
மாவட்ட செயலர், BSNLEU , C . பாலகுமார். மாவட்ட செயலர், NFTEBSNL, G . வெங்கட்ராமன், மாநில அமைப்பு செயலர், NFTEBSNL மற்றும்
S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர், BSNLEU ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

செழுமையான விவாதத்திற்கு பின், கிழ் கண்ட முடிவுகள் எடுக்க பட்டது.

1. NFTEBSNL - BSNLEU சங்கங்கள் இனைந்து கிளைகளில் தொடர்ந்து "மேளாக்கள்"  நடத்துவது. 

2. அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கத்தை நிறைவு செய்யாத கிளைகள், 29.08.2015 க்குள் நிறைவு செய்வது.

3. செப்டம்பர் 2 ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது. அதற்கு ஏதுவாக 1500 நோட்டிஸ் , 100 சுவரொட்டி வெளியிடுவது. நகர மற்றும் ஊரக கிளைகளில், தளா 2 நாட்கள் பிரசார சுற்று பயணம் மேற்கொள்வது. 

4. அனைத்து சங்கங்களையும் போராட்டத்தில் பங்குபெற கோருவது. 

இறுதியாக, தோழர் G . வெங்கட்ராமன், நன்றி கூற, கூட்டம் நிறைவு பெற்றது.