Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, August 26, 2015

ஓய்வறியா உழைப்பாளியின் ஒப்பற்ற பேரணி


BSNLEU - TNTCWU இரண்டு மாநில சங்கங்களின் அறைகூவலுக்கு ஏற்ப, சேலம், தர்மபுரி தொலை தொடர்பு  மாவட்டங்களை உள்ளடிக்கி, சேலத்தில், 25.08.2015 அன்று LEO அலுவலகம் நோக்கி பேரணி சென்று மகஜர் அளிக்கப்பட்டது. 

மத்திய தொழிலாளர் நல செயலாக்க அதிகாரி (LEO) உயர்திரு. J . சரவணன், அவர்களிடம் கோரிக்கை மகஜர் அளிக்கப்பட்டு பல்வேறு விஷயங்கள் விவாதிக்கபட்டது. 

மத்திய அதிகாரியும், நமது கோரிக்கைகளை பொறுமையாக கேட்டு, தக்க நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்தார். 

முன்னதாக பேரணி மற்றும் கூட்டத்திற்க்கு தோழர்கள் D. பாஸ்கரன், மாவட்ட தலைவர், BSNLEU , தர்மபுரி, K . ராஜன், மாவட்ட தலைவர், TNTCWU , சேலம் கூட்டு தலைமை தாங்கினார்கள். 

தோழர் C . பாஸ்கர், மாவட்ட செயலர், TNTCWU வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர்கள் செல்வம், (சேலம்), குமார் (தர்மபுரி), மாநில சங்க நிர்வாகிகள், TNTCWU , சௌந்தரராஜன், மாவட்ட துணை தலைவர், TNTCWU , தர்மபுரி, நந்தகுமார், கிளை செயலர், TNTCWU,ஓசூர், சண்முகம், தங்கராஜ், ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர்கள், BSNLEU சேலம் வாழ்த்துரை வழங்கினார்கள். 

தோழர் P . கிருஷ்ணன், மாவட்ட செயலர், BSNLEU E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU , சேலம் கண்டன சிறப்புரை வழங்கினார்கள். 

இறுதியாக, தோழர் A . ஜோதி, மாவட்ட செயலர், TNTCWU , தர்மபுரி நன்றி கூறி கூட்டத்தை முடித்துவைத்தார். 

ஓசூரில் துவங்கி பரமத்தி வேலூர் வரை உள்ள நான்கு வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இருந்து நீண்ட தொலைவையும் பொருட் படுத்தாமல், சுமார் 350 ஊழியர்கள் இயக்கத்தில் கலந்து கொண்டது, சிறப்பான விஷயமாகும். குறிப்பாக 30 க்கும் மேற்பட்ட பெண்கள் இயக்கத்தில் கலந்து கொண்டது நல்ல அம்சம்.

BSNLEU சேலம் மாவட்டம்  சார்பாக மாவட்ட சங்க நிர்வாகிகள், தோழர்கள் சின்னசாமி, பன்னீர் செல்வம், சார்லஸ் பிரேம் குமார், கிளை செயலர்கள் பாலகுமார், வேல்விஜய், செல்வராஜூ, சம்பத், செல்வம், சுப்பிரமணி, ராஜலிங்கம், காளியப்பன், கோபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

சிறப்பான பங்கேற்பை உத்தரவாதபடுத்த, அயராது பாடு பட்ட நான்கு மாவட்ட சங்கங்களின் கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், மாநில சங்க நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் அனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

இயக்கத்தில் கலந்து கொண்ட அத்துணை தோழர், தோழியர்களூக்கும் நான்கு மாவட்ட சங்கங்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். 

தோழமையுடன், 
E . கோபால், 
மாவட்ட செயலர்