ஒருங்கிணைப்பு குழு கூட்ட முடிவின்படி, நகர மற்றும் ஊரக கிளைகளில் தலா இரண்டு நாட்கள் பிரசார பயணம் மேற்கொள்வது என்பது முடிவு. அதன் படி 28.08.2015 அன்று ஊரக கிளைகளில் பிரசார பயணம் நடைபெற்றது.
முதலில் வாழப்பாடி, அதனை தொடர்ந்து ஆத்தூர், நாமகிரி பேட்டை, ராசிபுரம், நாமக்கல், பரமத்தி வேலூர், ஆகிய கிளைகளில் வாயிற் கூட்டங்கள் நடத்தபட்டது. இறுதியாக, திருச்செங்கோட்டில், சிறப்பு கூட்டம் நடை பெற்றது.
பயண குழுவில் NFTEBSNL சார்பாக மாவட்ட செயலர் தோழர் C . பாலகுமார், மாநில அமைப்பு செயலர் தோழர் G . வெங்கட்ராமன், BSNLEU சார்பாக மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் M . பன்னீர் செல்வம் ஆகியோர் சென்றனர்.
அனைத்து கிளைகளிலும் அந்த அந்த பகுதியை சேர்ந்த (2 சங்க) மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்கள் கூடுதலாக கலந்து கொண்டனர்.
ஊழியர்களை தனி தனியாகவும் சந்தித்து அதரவு கோரப்பட்டது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
திருச்செங்கோடு
பரமத்தி வேலூர்
நாமக்கல்
ராசிபுரம்
ஆத்தூர்
வாழப்பாடி