பொது துறை நிறுவனமான நமது BSNL நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க, மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
அதன் ஒரு படியாக நமது நிறுவனத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் டவர்களை தனியாக பிரித்து ஒரு புதிய கம்பெனி உருவாக்க மத்திய மந்திரி சபை முடிவு எடுத்துள்ளது.
இதை எதிர்த்து FORUM சார்பாக 12.08.2015, புதன் கிழமை அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த, மத்திய FORUM அறைகூவல் கொடுத்துள்ளது.
அதன்படி, நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும், 12.08.2015 அன்று சக்தி மிக்க ஆர்பாட்டம் நடத்த பட வேண்டும்.
FORUM அமைப்பில் உள்ள அனைத்து கிளை நிர்வாகிகளையும் நமது கிளை செயலர்கள் அனுகி , போராட்டத்தை வெற்றிகரமக்குமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர் , FORUM
மற்றும் மாவட்ட செயலர், BSNLEU