ஜூன் 2013 ல் நடை பெற்ற JTO LICE போட்டி தேர்வு முடிவுகள், நமது தமிழ் மாநிலத்தில் மட்டும் பல்வேறு நீதி மன்ற வழக்குகள் காரணமாக வெளியிட காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
ஒரு வழியாக வழக்குகள் முடிவு காணப்பட்ட சூழ்நிலையில், காலி பணியிடங்கள் கணக்ககிடுவதில், மாநில நிர்வாகம் குளறுபடி செய்தது.
நமது மாநில சங்கம் உடனடியாக தலையிட்டு, மத்திய சங்க உதவியுடன், காலி இடங்கள் மறு கணக்கிடு செய்ய வலியுறுத்தியது.
மத்திய சங்க முன்முயற்சியில், டில்லி தலைமையகம், திருத்தி அமைக்கப்பட்ட காலி பணி இடங்கள் அடிப்படையில், தேர்வு முடிவுகளை வெளியிட, தமிழ் மாநில நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் மூலம், நமது மாநிலத்தில் பல இளம் TTA தோழர்கள் JTO பதவி உயர்வு விரைவில் பெற உள்ளனர்.
கடுமையாக முயற்சி செய்து நியாயத்தை நிலை நாட்ட உதவிய மத்திய , மாநில சங்கங்களுக்கு சேலம் மாவட்ட சங்கத்தின் பாராட்டுக்கள்.
பதவி உயர்வு பெற உள்ள அனைத்து தோழர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்