ஒருங்கிணைப்பு குழு முடிவின் அடிப்படையில், வேலை நிறுத்த தயாரிப்பு பனியாக, 01.09.2015 அன்று மெய்யனுர் மற்றும் பொது மேலாளர் அலுவலக கிளைகளில் வாயிற் கூட்டம் மற்றும் வேலை நிறுத்த பிரச்சாரம் நடைபெற்றது.
இரண்டு சங்க மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி ஊழியர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களை அவர்களது இருக்கைக்கே சென்று சந்தித்து, ஆதரவு கோரப்பட்டது.