ஆனால், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணையதள சேவையின் வேகம், இதை விட அதிகம். இதனால், கடந்த சில ஆண்டுகளாக BSNL. வாடிக்கையாளர்கள், தனியார் நிறுவனங்களை நோக்கிச் செல்லும் நிலை உள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் முதல் நடப்பு ஆண்டு மார்ச் வரை 1 கோடியே 78 லட்சம் BSNL. செல்போன் வாடிக்கையாளர்களும், 20 லட்சம் BSNL. தொலைபேசி வாடிக்கையாளர்களும் தனியார் நிறுவனங்களை நோக்கிச் சென்று விட்டனர்.
இதனால் BSNL. நிறுவனத்திற்கு, ரூ. 7 ஆயிரத்து 600 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் இணைய தள சேவைவேகத்தை அதிகரிக்கும் பணிகளை BSNL. நிறுவனம் தொடங்கி யுள்ளது. இதனால், அக்டோபர் 1–ஆம்தேதி முதல் குறைந்தபட்சம் நொடிக்கு 2 எம்.பி. அதிவேகத்தில் இணையதள சேவையை BSNL. வழங்க உள்ளது. எனினும், வாடிக்கையாளர்கள் இதற்காக கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தாமலேயே அதிவேக இணையதள சேவையை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.