02.09.2015 ஒரு நாள் பொது வேலை நிறுத்தம், நமது மாவட்டத்தில் சிறப்பாக நடை பெற்றது. ஒருங்கிணைப்பு குழுவில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில், இரண்டு சங்கங்களும் இனைந்து வேலை நிறுத்தத்தை சந்தித்தோம். தோழமை சங்கங்களும், அமைப்புகளும் நம்மோடு சிறப்பாக போராட்டத்தில் கலந்து கொன்டனர்.
நமது மாவட்டத்தில் மொத்த NE ஊழியர்கள் - 1149
போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் - 720
விடுப்பு - 190
கிட்டதட்ட, 63 சதம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டது பாராட்டுதுலுக்குரிய விஷயம்.
ஒப்பந்த ஊழியர்கள் 100 சதம் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். ஒப்பந்த ஊழியர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .
சேலம் மாநகரில் உள்ள அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பாக பிரமாண்டமான பேரணி நடை பெற்றது. நாமும் அதில் திரளாக கலந்து கொண்டோம்.
வேலை நிறுத்தத்தை வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக மாற்ற, அயராது உழைத்த, அணைத்து சங்க மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி ஊழியர்கள் ஆகியோரை கூட்டு போராட்ட குழு சார்பாக பாராட்டுகிறோம்.
சிறப்பான வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட அனைத்து ஊழியர்களுக்கும், தோழர், தோழியர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் நெஞ்சு நிறை நன்றி, புரட்சிகர வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
நன்றியுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
குறிப்பு: மாவட்ட சங்கத்துக்கு தகவல் அனுப்பிய ஆத்தூர் மற்றும் திருச்செங்கோடு படங்களும் இடம் பெற்றுள்ளது.
குறிப்பு: மாவட்ட சங்கத்துக்கு தகவல் அனுப்பிய ஆத்தூர் மற்றும் திருச்செங்கோடு படங்களும் இடம் பெற்றுள்ளது.