அருமைத் தோழர்களே ! அனைவராலும் அன்பாக "பெத்தேல் " என அழைக்கப்படும் அருமைத் தோழர் " D.J.J.பெத்தேல் ராஜ்" இன்று 21.09.15 மதியம் 3 மணிக்கு இயற்கை எய்தி விட்டார் என்பதை மிக, மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
K.G.போஸ் அணியை கட்டுவதில் முன்னின்ற தலைவர்களில் இவரும் ஒருவராக இருந்து, தமிழகம் முழுவதும் சென்று பணியாற்றியவர்.தொழிற்சங்க செயல்பாட்டிற்காக நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டு, பாண்டிச்சேரியில் இருந்து பழனிக்கு மாற்றப்பட்டார்.
மதுரை மாவட்டத்தில் K.G.போஸ் அணி முன்னணி படையாக வளர்வதற்கு அரும்பாடு பட்டவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருதய சிகிச்சை செய்து நலமுடன் இருந்து வந்தார். தற்போது, மீண்டும் இருதய சிகிச்சை கடந்த வாரம் சென்னையில் செய்யப்பட்டது. அதற்குப் பின் அவருக்கு இருதயம் சரியாக இயங்குவதாகவும். கிட்னி செயல்இல்லாமல் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
அதன் பின் சிகிச்சை பலனின்றி தோழர். D.J.J.பெத்தேல் ராஜ்" இயற்கை எய்திவிட்டார். அன்னாருக்கு நமது BSNLEU சேலம் மாவட்ட சங்கம் தனது அஞ்சலியை உரித்தாக்குகிறது.
வருத்தங்களுடன்,
E .கோபால்,
மாவட்ட செயலர்