அருமை தோழர்களே ! ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதா மாதம் சம்பளம் பட்டு வாடா செய்வதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. நாமும் நிர்வாகத்தை சந்திப்பது, கோரிக்கையை வலியுறுத்துவது, பின்னர் கால தாமதமாக சம்பளம் பெறுவது என்பது தொடர் கதை ஆகிவிட்டது.
இந்த அவலத்தை கண்டித்து, போராட்ட களம் கான இரண்டு சங்கங்களும் இணைந்து முடிவு எடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் , நாளை 16.09.2015 அன்று சேலம் பொது மேலாளர் அலுவலகம் முன்பு மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இரண்டு சங்க தோழர்களும், ஒப்பந்த ஊழியர் சங்க நண்பர்களும், திரளாக ஆர்பாட்டத்தில் பங்கு கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
நாள்: 16.09.2015 நேரம்: மதியம் 13.00 மணி அளவில்,
இடம்: பொது மேலாளர் அலுவலகம், சேலம் - 7
தோழமையுடன்,
BSNLEU -NFTEBSNL மாவட்ட சங்கங்கள்
நிர்வாகத்திற்கு இரண்டு சங்கங்கள் சார்பாக வழங்கப்பட்ட கடிதம் காண இங்கே சொடுக்கவும்