Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, September 14, 2015

FORUM சார்பாக மாலை நேர பெருந்திரள் தர்ணா போராட்டம்






நமது BSNL நிறுவனத்தின் 65000 செல் கோபுரங்களைப் பிரித்து தனி நிறுவனமாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்துள்ள
மத்திய அமைச்சரவையின் முடிவை எதிர்த்து, சேலம் மாவட்ட FORUM  சார்பாக 16-09-2015 புதன்கிழமை அன்று நாடு தழுவிய தர்ணா போராட்டம் நடத்திட மத்திய FORUM அறைகூவல் கொடுத்துள்ளது.

அந்த அறைகூவலை தொடந்து, நமது சேலம் மாவட்டத்தில் ஒருசில தவிர்க்க முடியாத காரணங்களால், முழு நேர தர்ணாவிற்கு மாற்றாக, மாலை நேர பெருந்திரள் தர்ணா போராட்டம் நடத்திட மாவட்ட FORUM முடிவு எடுத்துள்ளது.

அதன் அடிப்படையில், நமது சேலம் மாவட்டத்தில்,

16-09-2015 - புதன் கிழமை - மாலை 04-00 மணி முதல்
மெயின் தொலைபேசி நிலையம், சேலம்- 636 001.

நிறுவன நலன் காத்திட... 
ஆர்ப்பரிப்போம் தோழர்களே!...
அனைவரும் வருக!!...  
இயக்கத்தை வெற்றி பெற செய்க !!! ...

தோழமையுடன்,

FORUM - சேலம் மாவட்டம்