18.09.2015, இன்று நடைபெற்ற BSNL வாரிய கூட்டத்தில் ( BSNL Board Meeting ) JTO ஆளெடுப்பு விதியில் (Recruitment Rules ) நாம் கோரியிருந்த திருத்தங்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளன.
இலாகா போட்டி தேர்வு மூலம் JTO பதவி உயர்வு பெற வேண்டும் என்றால், 10 ஆண்டுகள் சேவை முடித்திருக்க வேண்டும் என்ற விதியை கடுமையாக போராடி 7 ஆண்டுகளாக முன்பே குறைத்தோம்.
இருப்பினும் , நமது நீண்ட நாள் கோரிக்கையான, "5 ஆண்டுகள் சேவை தகுதி" என்பதை அடைய பல கட்ட இயக்கங்கள் நடத்தினோம்.
சென்ற 08.09.2015 அன்று கூட, ஓர் ஆண்டுக்கு மேலாக கிடப்பில் உள்ள இந்த கோரிக்கையை விரைவில் தீர்க்க வேண்டும் என மனிதவள இயக்குனரை சந்தித்து, கடுமையாக நமது மத்திய சங்கம் வாதிட்டது.
அதன் பலனாக, இன்று நடைபெற்ற BSNL வாரிய கூட்டத்தில் நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, 7 ஆண்டுகள் சேவை தகுதி என்பது 5 ஆண்டுகளாக குறைக்க பட்டுள்ளது.
மற்றுமொரு கூடுதல் மகிழ்ச்சி என்ன வென்றால், நீண்ட நாட்களாக தற்காலிக JTO பதவி வகிக்கும் நமது மூத்த TTA தோழர்களுக்கும் (Officiating JTOs ) நிரந்தர JTO பதவி பெற ஒப்புதல் கிடைத்துள்ளதுதான்.
மிக நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற
தொடர் முயற்சி செய்த நமது மத்திய சங்கத்திற்கு நன்றிகள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்