அருமைத் தோழர்களே! 12.10.2015 அன்று டெல்லியில் நடைபெற்ற FORUM கூட்டத்தில், 19.10.2015 திங்கள் அன்று மத்திய, மாநில, மாவட்ட தலைநகரங்களில் FORUM சார்பாக, போனஸ் கோரி தர்ணா போராட்டத்தை சக்தியாக நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது.
நாம் ஏற்கனவே, கடந்த 06.10.2015 அன்று நாடு முழுவதும் இதே போனஸ் கோரிக்கைக்காக சக்தியான ஆர்பாட்டத்தை FORUM சார்பாக நடத்தினோம் என்பது குறிப்பிடத்தக்கது.
"BSNLல் பணிபுரியும் அனைவருக்கும் போனஸ்" என்று நமது FORUM வைத்துள்ள கோரிக்கை வெற்றிபெற, 19.10.2015 அன்று நடைப்பெற உள்ள, நாடு தழுவிய தர்ணா போராட்டத்திற்கு, முழுமையான பங்கேற்பை, உத்தரவாத படுத்த, இப்போதிருந்தே திட்டமிட்டு செயலாற்றிட அனைத்து கிளைகளையும் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நமது மாவட்டத்தில், தர்ணா நடைபெறும் இடம் மற்றும் நேரம் போன்ற விவரங்கள், மாவட்ட FORUM கூட்டதிற்கு பின் அறிவிக்கப்படும்.
தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர், FORUM மற்றும்
மாவட்ட செயலர், BSNLEU