Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, October 16, 2015

ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளுக்காக நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை

Image result for formal meeting clipart


ஒப்பந்த ஊழியர் சம்பளம், போனஸ், பிரச்சனைகளை மையபடுத்தி, நிர்வாகம், ஒப்பந்ததாரர், நாம் கலந்து கொண்ட பேச்சு வார்த்தை, பொது மேலாளர் அலுவலகத்தில், 15.10.2015 அன்று நடை பெற்றது. 

நிர்வாக தரப்பில், DGM (CFA), AGM உள்ளிட்ட அதிகாரிகளும், ஒப்பந்ததாராரும், நமது தரப்பில் (BSNLEU , TNTCWU இரண்டு மாவட்ட சங்கங்கள் சார்பாக), BSNLEU மாவட்ட  செயலர், தோழர் E . கோபால், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் M . பன்னீர் செல்வம், TNTCWU மாவட்ட தலைவர், தோழர் K . ராஜன், மாவட்ட பொருளர் தோழர் P . செல்வம், ஆகியோர் கலந்து கொண்டோம்.

கிழ்கண்ட விஷயங்கள் விவாதிக்கபட்டு, முடிவுகள் எடுக்கபட்டது. 

1. மாதா மாதம் சம்பளம் பட்டுவாடா செய்வதில் ஏற்படும் கால தாமதத்தை சுட்டிக்காட்டி, கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினோம். 15 தேதி ஆகியும், இந்த மாதம் சம்பளம் பட்டு வாடா செய்யபடாததை கண்டித்து தல மட்ட போராட்டத்தில், ஈடுபட போவதாக கூறினோம். நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, சம்பளம் பட்டு வாடா செய்ய ஏற்பாடு செய்ய உறுதி அளித்தது. அதன்படி, நேற்று (15.10.2015) மாலையே , சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. 

2. அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி, சம்பளமும், போனசும், 05.11.2015 க்குள் பட்டு வாடா செய்ய வேண்டும் என கோரினோம். நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகம் உறுதி அளித்து உள்ளது. 

3. சென்ற ஆண்டு நிலுவை போனஸ் கோரினோம். ஒப்பந்ததாரருடன் நடைபெற்ற  நீண்ட விவாததிற்கு பின், 60 சதம் முதல் தவணையாக தர சம்மந்தம் தெரிவிக்கப்பட்டது. 

சுமூகமாக பேச்சு நடத்த ஏற்பாடு செய்த, நல்ல முடிவுகள் எடுக்க உதவிய, நிர்வாகத்திற்கு நன்றிகள்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்