33வது தேசிய கவுன்சில் கூட்டம் 16.10.2015 அன்று நடைபெறும். முன்னதாக, ஊழியர் தரப்பு Pre -Council கூட்டம் 15.10.2015 அன்று நடைபெறும்.
32 வது தேசிய கவுன்சில் கூட்டத்தில், BSNLMRS திட்டத்தை மறு பரிசிலிக்க ஒரு குழு அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை அமுல் படுத்துவதில் காலதாமதம் ஏற்படுவதை கண்டித்து மனிதவள இயக்குனருக்கு, நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
BSNLCCWF , ஒப்பந்த ஊழியர்களின் அகில இந்திய 3வது மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. நல்ல பல தீர்மானங்களும், போராட்ட இயக்கங்களும் மாநாட்டு செய்தியாக வெளிவந்துள்ளது. தோழர் V .A .N . நம்பூதிரி, தலைவராகவும், தோழர் தபஸ் கோஷ் செயல் தலைவராகவும், தோழர் அனிமேஷ் மித்ரா பொது செயலராகவும், தோழர் தபஸ் பானர்ஜி பொருளராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
09/10/2015 முதல் GPF நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது.
BSNL ல் 01.08.2014 இக்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய பொது இன்சூரன்ஸ் திட்டம் - LIC அறிவிப்பு
தமிழகத்தில் 02-06-2013 அன்று நடந்த JTO இலாக்காத் தேர்வில் ST காலியிடங்களில் 7 தோழர்கள் வெற்றி பெற்றதாக தமிழக நிர்வாகம் அறிவித்துள்ளது. வெற்றி பெற்ற தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள். நமது மாவட்டத்தில் தோழர் கமலக்கண்ணன் வெற்றி பெற்றுள்ளார். தோழருக்கு நமது நல் வாழ்த்துக்கள்.
JTO ஆளெடுப்பு விதிகளில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு விரைவில் உத்திரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA இணைப்பை அமுல்படுத்துவது சம்பந்தாகவும், தனி TOWER CORPORATION அமைப்பது சம்பந்தமான பிரச்சினையில் அரசால் அமைக்கப்படும் அமைச்சர்கள் குழுவில் BSNL சார்பாக அதிகாரிகளை சேர்த்திடக் கோரியும் DOT செயலரை நமது கூட்டமைப்புத்தலைவர்கள் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்