BSNL CCWF சங்கத்தின் 3வது அகில இந்திய மாநாடு எழுச்சியுடன் நாகர் கோவில் நகரில் துவங்கியது. முதல் நிகழ்வாக தேசியக் கொடியை BSNLEU புரவலரும், BSNL CCWF அகில இந்திய தலைவருமான
தோழர் V .A .N . நம்பூதிரி ஏற்றி வைக்க, விண்ணதிரும் கோஷங்கலுக்கிடையே சங்கக் கொடியை தோழர் தபஸ் கோஷ் அகில இந்திய பொது செயலர், BSNL CCWF ஏற்றி வைத்தார்.
தோழர் நம்பூதிரி தலைமை தாங்க, வரவேற்பு குழு தலைவர்
தோழர் A . V . பெல்லார்மின், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனைவரையும் வரவேற்றார்.
தோழர் A .K .பத்மநாபன், அகில இந்திய தலைவர், CITU மாநாட்டை துவக்கி வைத்தார். BSNLEU அகில இந்திய பொது செயலர் தோழர்
P . அபிமன்யூ , துணை தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா, AIBDPA துணை தலைவர் தோழர் மோகன் தாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்தி சிறப்புரை வழங்கினார்கள்.
சிறப்பான ஒரு பேரணி நடை பெற்றது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
துவக்க நிகழ்வுகள் காண இங்கே சொடுக்கவும்
பேரணி காட்சிகள் காண இங்கே சொடுக்கவும்