நவம்பர் 24 முதல் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் தெற்கு ரயில்வே முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.இதுதொடர்பாக டிஆர்இயு பொதுச் செயலாளர் அ.ஜானகிராமன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு
7வது சம்பளக் கமிஷன் சிபாரிசு அமல்படுத்துவது குறித்து மீண்டும் ஒரு குழு அமைத்து முடிவெடுக்கப்படு மென நிதியமைச்சர் கூறியுள்ளார். குழுமத்திற்கு குழு அமைப்பது காலம் கடத்துவதற்கே! 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் சம்பளக் கமிஷன், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பது நிராகரிக்கப்பட்டுள்ளது. 7வது சம்பளக் கமிஷன் அறிக்கை இரண்டாவது சம்பளக் கமிஷனின் சம்பள உயர்வுக்கு இணையாக குறைக்கப்பட்டுள்ளது. 6வது சம்பளக் கமிஷன் மத்திய அரசு ஊழியர்களுக்கு 54 சதம் சம்பள உயர்வை கொடுத்தது. ஆனால் 7வது சம்பளக் கமிஷனோ 14.2 சதம் மட்டுமே உயர்வை அளித்துள்ளது. குறைந்தபட்ச சம்பளமாக ரூ.26,000 உயர்த்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை சம்பளக் கமிஷன் நிராகரித்துள்ளது. ஒட்டுமொத்தமான உயர்வு 14.2 சதமாகவே உள்ளது.
அதிகாரிகளுக்கு ரூ.90ஆயிரமாக இருந்த சம்பளத்தை இரண்டரை லட்ச ரூபாயாக உயர்த்தியுள்ளது.7வது சம்பளக் கமிஷன் 1.1.2014 முதல் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்காண்டு வழங்கப்படும் இன்கிரிமென்ட் 5சதம் கேட்பது நிராகரிக்கப்பட்டு தற்போதுள்ள அதே 3 சதம் கொடுக்கப்பட்டுள்ளது.வீட்டு வாடகைப்படி தற்போதுள்ள 30 சதம் குறைக்கப்பட்டு 24 சதமாக குறைக்கப்பட்டுள்ளது. 20சதம் என்பது 16 சதமாகவும் 10 சதம் வீட்டு வாடகைப்படி பெற்றவர்களுக்கு 6 சதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெறுவதற்குள் 5 பதவி உயர்வு என்ற கோரிக்கை மறுக்கப்பட்டு தற்போதுள்ள அதே மூன்று பதவி உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குடும்பக் கட்டுப்பாட்டு அலவன்ஸ் உட்பட 52 வகையான அலவன்சுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்பட்ட காசுவல் லீவை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட நிராகரிப்பு, எந்த லீவிலும் மாற்றமில்லை. 20 வருடம் பணிமுடித்த தொழிலாளர்களுக்கு வேலைத்திறன் இல்லை எனக் காரணம் கூறி வருடாந்திர இன்கிரிமென்ட்டை முடக்கவும் வி.ஆர்.-ல் அனுப்பவும் திட்டம். அதிகாரிகளின் அடக்குமுறைகளை அதிகரிக்கும் வகையில் எக்ஸ்ட்ரா ஒர்க் அலவன்ஸ் அறிமுகப்படுத்தியது தொழிலாளர்களிடையே பிளவை ஏற்படுத்தும்.
எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு கீழ்க்காணும் அட்டவணையில் உள்ள தொகைதான் சம்பள உயர்வு