ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளுக்காக 31.10.2015 அன்று நிர்வாகத்தை BSNLEU - NFTEBSNL மாவட்ட சங்கங்கள் சார்பாக கூட்டாக சந்தித்தோம்.
DGM (CFA), DGM (HR /Admn ), AGM (HR /Admn ), ஆகியோரை சந்தித்தோம்.
இரண்டு சங்கங்கள் சார்பாக கிழ்கண்ட தோழர்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டோம்.
1. தோழர் E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU
2. தோழர் C . பாலகுமார், மாவட்ட செயலர், NFTEBSNL
3. தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி செயலர், BSNLEU
4. தோழர் G . வெங்கட்ராமன், மாநில அமைப்பு செயலர், NFTEBSNL
5. தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர், BSNLEU
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களும், முடிவுகளும்
1. 05.11.2015 க்குள் அக்டோபர் மாத சம்பளம் மற்றும் போனஸ் பட்டுவாடா செய்யபடுவதை உத்தரவாத படுத்த வலியுறுத்தினோம். நிர்வாகம் ஏற்று கொண்டு, செயல்படுத்த உறுதி அளித்தது.
2. 2013-14 ஆம் ஆண்டு நிலுவை போனஸ் கோரினோம். விரைந்து நடவடிக்கை எடுக்க நிர்வாகம் ஒத்து கொண்டது.
3. 31.10.2015 உடன் நடப்பு Tender முடிவுக்கு வருகிறது. புதிய Tender இறுதி படுத்தும் வரை மாற்று ஏற்பாடாக நிர்வாகமே சம்பளத்தை நேரடியாக பட்டு வாடா செய்வது அல்லது குறுகிய காலத்துக்கு பழைய Tender ஐ நீட்டிப்பது என ஆலோசனை வழங்கினோம். நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது.
4. புதிய Tender அமுல்படுத்தும் போது , Urban, Rural ஒரே மாதிரியான முறை கையாளப்பட கோரினோம். நிர்வாகம் சாதகமாக பரிசிலிக்க ஒப்பு கொண்டது.
5.பழைய ஒப்பந்ததாரரிடம், EPF/ESI பிடித்த தொகை உரிய இடங்களில் முழுமையாக கட்ட பட்டதை நிர்வாகம் உத்திரவாத படுத்த வலியுறுத்தினோம். நிர்வாகம் ஏற்று கொண்டது.
மேற்கண்ட பிரச்சனைகளில் தீர்வு ஏற்படாவிட்டால், இரண்டு சங்கங்களும் இணைந்து தல மட்ட போராட்டத்தில் குதிக்கும்.
தோழமை வாழ்த்துகளுடன்,
E . கோபால், C . பாலகுமார்,
மாவட்ட செயலர், BSNLEU மாவட்ட செயலர், NFTEBSNL
(கூட்டு அறிக்கை)