கடந்த 24 மற்றும் 25ம் தேதிகளில், நமது மத்திய செயற்குழு புதுடில்லியில் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு தேச நல, நிறுவன நல, ஊழியர் நல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
செயற்குழுவின் ஒரு பகுதியாக சேவை கருத்தரங்கம் நடை பெற்றுள்ளது. அதில், CMD திரு. அனுபம் ஸ்ரீவத்சவா, மனிதவள இயக்குனர் திருமதி. சுஜாதா ராய் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
நமது புரவலர் தோழர் V .A .N . நம்பூதிரி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
செயற்குழுவின் முடிவுகள் சுருக்கமாக:
1. 02.09.2015 ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் வெற்றிகரமாக்யதற்காக அனைத்து ஊழியர்கள் மற்றும் மாவட்ட, மாநில சங்கங்களுக்கும் பாராட்டுதலும் நன்றியும் தெரிவிக்கபட்டது. நவீன தாராளமய கொள்கைகைளுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
2. BSNL நிதி ஆதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் திருப்தி அளிக்கிறது. FORUM அமைப்பு மூலம் BSNL புத்தாக்கம் பனிகளை மேலும் வலு பெற செய்வது.
3. துணை நிறுவனம் அமைக்கும் முடிவை தொடர்ந்து எதிர்ப்பது.
4. BSNL - MTNL இணைப்பு பிரச்னையை FORUM அமைப்பில் விவாதிப்பது.
5. பிராட்பேன்ட் பராமரிப்பு பனியை Outsourcing செய்வதை எதிர்ப்பது.
6. கேரளா மற்றும் ஜம்ஷத்பூர் பழி வாங்கல் விவகாரங்களை சிறப்பாக மத்திய தலைமையகம் கையாண்டதை செயற்குழு பாராட்டியது. விரைந்து எஞ்சியுள்ள பிரச்சனைகளையும் தீர்வு காண்பது.
7. BSNL ல் நேரடி நியமனம் பெற்றவர்களின் 30 சதவீத ஓய்வுதிய பலன்கள் பிரச்சனையில் ஏற்படும் கால தாமதத்தை செயற்குழு கண்டிக்கிறது. FORUM கோரிக்கைப்படி, 12 சதம் ஓய்வுதிய நிதி பிடித்தம் செய்யப்படவேண்டும்.
8. டெல்ஹௌசி செயற்குழு முடிவுப்படி, தொழிற் சங்க வகுப்புகள் நடத்தப்படும்.
9. பனிக்குழு கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். மாநில அளவில் அது போன்ற குழுக்கள் உருவாக்கபட வேண்டும்.
10. அரியானா , NTR மற்றும் ஜார்கண்ட் மாநில கவுன்சில் கூட்டங்கள் உடனடியாக நடத்தபட வேண்டும்
11. வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றோர் விவரம் மற்றும் மாவட்ட வாரியான உறுப்பினர் விவரங்களை உடனடியாக மாநில சங்கங்கள், மத்திய சங்கத்திற்கு அனுப்ப வேண்டும்.
12. அனாமலி பிரச்சனையில் தலைமையகம் கோரியுள்ள விவரங்களை மாநில நிர்வாகங்கள் அனுப்ப மாநில சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
13. ஊதிய தேக்கம், 30 சத வீத ஓய்வுதிய பலன்கள், அனாமலி, ஓய்வூதியர்களுக்கு 78.2 சத வீத பஞ்சப்படி இணைப்பு பலன்கள், போனஸ், SC /ST ஊழியர்களுக்கு தேர்வில் குறைந்தபட்ச மதிப்பென்களில் சலுகைகள், பதவிகள் பெயர் மாற்றம், NEPP பிரச்சனைகள் உள்ளிட்ட விஷயங்களை தொடர்ந்து முயற்சித்து, மத்திய தலைமையகம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என செயற்குழு முடிவு செய்துள்ளது.
14. அன்னல் அம்பேத்கரின் 125 வது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாட அணைத்து மாநில மாவட்ட சங்கங்களுக்கும் செயற்குழு அறைகூவல் விடுத்துள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
செயற்குழு படங்கள் காண இங்கே சொடுக்கவும்
கருத்தரங்கம் படங்கள் காண இங்கே சொடுக்கவும்
தோழர் நம்பூதிரி கௌரவிப்பு நிகழ்வுகள் காண இங்கே சொடுக்கவும்