அவருடைய, பேட்டியில் மேலும் தெரிவிக்கபட்டுள்ள தகவல்கள்
1. சேவைகள் மூலம் வரும் வருவாய் 4.16 சதம் அதிகரித்து, ரூ. 27,242 கோடியாக உள்ளது. சென்ற நிதி ஆண்டில் இது ரூ.26,153 கோடி தான் .
2. இந்த ஆண்டு செயல் லாபம் ரூ. 672 கோடி. சென்ற, 2013-14ம் ஆண்டில் இதே பிரிவில் (இயக்க செலவு)ரூ. 691 கோடி நஷ்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
3. நிகர நஷ்டம் 8,234 கோடி. 2,000 கோடி தேய்மான கணக்கு.
4. 10000 ஊழியர்கள் பனி ஓய்வில் சென்றதால், நிர்வாக செலவு குறைந்துள்ளது.
5. BSNL நிறுவனம் 2018-19 ஆண்டில் லாபமீட்டும் நிறுவனமாக மாறும்.
6. சென்ற 2 ஆண்டில், 25000 செல் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம், BSNL நிறுவனத்தின் கோபுரங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டிவிட்டது.
7. விரிவாக்கதிற்காக, இந்த நிதி ஆண்டில், 7000 கோடி செலவு செய்யப்படும்.
8. 4G சேவை மார்ச் மாதத்திற்குள் குறிப்பிட்ட சில நகரங்களில் தொடங்கப்படும்.
9. தற்போது, 400 Wi -Fi தளங்கள் உள்ளது. அது 40,000 ஆக உயர்த்தப்படும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்