BSNLEU பரமத்தி வேலூர் கிளை தலைவர் தோழர் P .K .ஆறுமுகம், 30.11.2015 அன்று பணி ஒய்வு பெற உள்ளார். தோழருக்கு வேலூர் கிளை சார்பாக பாராட்டு விழா 26.11.2015 அன்று வேலூரில் சிறப்பாக நடை பெற்றது.
விழாவிற்கு தோழர் V . ஆறுமுகம், கிளை செயலர் தலைமை தாங்கினார்.
முன்னாள் கிளை செயலர் தோழர் O . ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் P . தங்கராஜ், R . ரமேஷ், கிளை செயலர்கள் தோழர்கள் N . பாலகுமார் (GM அலுவகலம்), P . செல்வம், (கொண்டலாம்பட்டி), S . ராமசாமி, (நாமக்கல் நகரம்), A . அங்குராஜ், (நாமக்கல் ஊரகம்), K. ராஜலிங்கம் (திருச்செங்கோடு நகரம்), K . ராஜன் (திருச்செங்கோடு ஊரகம்), V . பரந்தாமன் (பள்ளிபாளையம்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
திருச்செங்கோடு கோட்ட பொறியாளர் திரு. பாலசுப்ரமணியம், விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
தோழர் E . கோபால், மாவட்ட செயலர், தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி செயலர் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
தோழர் P .K . ஆறுமுகம், ஏற்புரை வழங்கினார்.
இறுதியாக, தோழர் M . சண்முகம், மாவட்ட உதவி செயலர், நன்றி கூறி விழாவை முடித்து வைத்தார். திரளாக தோழர்கள் பங்கு பெற்றது விழாவின் சிறப்பம்சம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்