BSNLCCWF அகில இந்திய மாநாட்டு முடிவின்படி, ஒப்பந்த ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 30.11.2015 அன்று மனு கொடுக்கும் போராட்டம் மற்றும் ஆர்பாட்டம் நடத்த அறைகூவல் கொடுக்கபட்டிருந்தது. நமது மாவட்டதில், இரண்டு இயக்கங்களும் சிறப்பாக நடை பெற்றது.
முதலில் மதியம் 12.15 மணி அளவில் மாவட்ட முதுநிலை பொது மேலாளர் திரு. S .சபீஷ் அவர்களை நேரில் சந்தித்து CMD க்கு அனுப்ப பட வேண்டிய கோரிக்கைகளை மகஜராக வழங்கினோம்.
இந்த நிகழ்வில் BSNLEU சங்கம் சார்பாக, மாவட்ட செயலர் தோழர்
E . கோபால், மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், மாவட்ட அமைப்பு செயலர்கள் தோழர்கள் M . பன்னீர்செல்வம், R . வேலு, GM அலுவலக கிளை செயலர் தோழர் N . பாலகுமார், MAIN கிளை செயலர் தோழர் காளியப்பன் ஆகியோரும், TNTCWU சங்கம் சார்பாக, மாவட்ட தலைவர் தோழர் K . ராஜன், மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கர், மாநில நிர்வாகி தோழர் செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிர்வாக தரப்பில் முதுநிலை பொது மேலாளருடன், துணை பொது மேலாளர் (நிர்வாகம்), திருமதி. R . உமா, உதவி பொது மேலாளர், (நிர்வாகம்) திரு. C . கந்தசாமி, ஆகியோர் இருந்தனர்.
பின்னர் நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில், மாவட்டம் முழுவதுலுமிருந்து, 100 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் இயற்கை இடர்பாடுகளை பொருட் படுத்தாமல் திரளாக கலந்து கொண்டனர்.
போராட்டத்திற்கு TNTCWU மாவட்ட தலைவர் தோழர் K . ராஜன், BSNLEU GM அலுவலக கிளை செயலர் தோழர் N . பாலகுமார் கூட்டு தலைமை தாங்கினர்.
TNTCWU மாவட்ட பொருளர் தோழர் P . செல்வம் ஆர்பாட்ட கோஷங்களை எழுப்பினார். TNTCWU மாநில நிர்வாகி தோழர் செல்வம், TNTCWU மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கர், BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன் ஆகியோர் கண்டன உறை வழங்கினார்கள்.
BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால், கண்டன சிறப்புரை வழங்கினார்.
இறுதியாக, BSNLEU மாவட்ட அமைப்பு செயலர், தோழர் M . பன்னீர்செல்வம், நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.
பின்னர் மாநில சங்கம் சார்பாக வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளை தோழர்களுக்கு BSNLEU மாவட்ட செயலர்
தோழர் E . கோபால், வழங்கினார்.
இரண்டு சங்கங்கள் சார்பாக, இரண்டு நிகழ்விலும் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் நெஞ்சு நிறை நன்றி.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்