Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, December 11, 2015

ஊருக்குழைத்திடல் யோகம்

Image result for mahakavi bharathiyar wallpapers

உற்றவர் நாட்டவர் ஊரார் - இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம் - 
இதில் நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை

பக்கத்திருப்பவர் துன்பம் - தன்னைப்பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்திஒக்கத் திருத்தி உலகோர் - 
நலம்உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி

ஊருக்குழைத்திடல் யோகம் - நலம்
ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்;
போருக்கு நின்றிடும் போதும் - உளம்

பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞானம்- 

மகாகவி பாரதியார்


இன்று (டிசம்பர் 11) மகாகவி பாரதியார் பிறந்த நாள்