Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, December 30, 2015

புன்னைகையுடன் சேவை முறைப்படி துவங்கப்பட்டது.




FORUM அமைப்பின் ஆலோசனை படி, "புன்னைகையுடன் சேவை" திட்டத்தை, நிர்வாகமும் ஏற்று, உத்தரவாக வெளியிட்டது. 

அதன் முறையான துவக்க விழா, டில்லி தலைமையகத்தில் இன்று, (30.12.2015) நடத்தப்பட்டது. ஒரே நேரத்தில், மாநில, மாவட்ட மற்றும் அனைத்து அலுவலகங்களிலும், துவக்கி வைக்கப்பட்டு, உறுதி மொழி ஏற்கப்பட்டது. 

டில்லி தலைமையகத்தில், நடத்தப்பட்ட சிறப்பு கூட்டத்தில், CMD மற்றும் உயர் அதிகாரிகள் உறுதி மொழி ஏற்றனர். 

நமது புரவலரும், BSNL தொழிற் சங்கங்களின் மூத்த தலைவருமான, தோழர் V .A .N . நம்பூதிரி, நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யு, உள்ளிட்ட FORUM தலைவர்கள் நிகழ்ச்சியில், கலந்து கொண்டனர். 

நமது மாவட்டத்திலும் அனைத்து அலுவலகங்கிலும், உறுதி மொழி எடுத்து கொள்ளப்பட்டது. 

FORUM முடிவுகளை வெற்றிகரமாக்குவோம்! 

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 

தலைமையாக நிகழ்ச்சி படங்கள் காண இங்கே சொடுக்கவும்.