Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, December 11, 2015

மகத்தான சாதனை - புதிய பதவிகள் பெயர் - ஒப்பந்தம் எட்டப்பட்டது

Image result for name change


BSNL ல் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய பதவிகள் பெயர் பெற்று தருவதற்காக கமிட்டி அமைக்கப்பட்டு, TTA / Sr .TOA / TM / RM கேடர்களுக்கு புதிய பதவி பெயர் வழங்க ஒப்பந்தம் ஏற்கனவே எட்டப்பட்டிருந்தது . 

இருப்பினும், Sr.TOA NE 7 முதல் NE 10 வரை உள்ள தோழர்களின் புதிய பெயர் அந்த ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியிருந்தது. 
அந்தப் பிரச்சனைக்குத்  தீர்வு காண, மாற்று யோசனைகளை நமது சங்கம் முன்மொழிந்தது. 

அதே போல் TTA தோழர்களுக்கு JE பெயர் வழங்க நிர்வாகம் தயங்கியது. 

இந்த பின்னணியில், மத்திய சங்கம் கமிட்டி கூட்டத்தை உடனடியாகக்  கூட்டத்  தொடர்ந்து வலியுறுத்தியது. 

நமது தொடர் முயற்சியின் பலனாக, இன்று, 11.12.2015 கமிட்டி கூட்டம் நடைபெற்றது. 

அதில், நமது முன் மொழிவுகள் ஏற்கப்பட்டு, பல முன்னேற்றங்களுடன் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.

அதன் படி,

NE 7 & NE 8     Sr. TOA - Senior Office Associate
NE 9 & NE 10   Sr. TOA - Assistant Office Superintendent
NE 11 & NE 12 Sr. TOA - Office Superintedent 

RM  - Assistant Telecom Technician

TM  - Telecom  Technician

TTA - Junior Engineer

Sr.TOA மற்றும் RM தோழர்களுக்கும் இந்த ஒப்பந்தம் மூலம் நல்ல பதவி பெயர் பெற்று தந்துள்ளோம்.

அடுத்த கட்டமாக, இந்த ஒப்பந்தம் Management Committee ஒப்புதலுக்கு செல்லும். உத்தரவு விரைவில் வெளி வரும் என நமது மத்திய சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. 

மத்திய சங்கத்துக்கு பாராட்டுக்கள்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்

ஒப்பந்த நகல் கான இங்கே சொடுக்கவும்