தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும், அதற்கு தங்களால் இயன்ற தொகையை வசூலித்து அனுப்பவும் என நமது தமிழ் மாநில சங்கம் அனைத்து மாவட்ட சங்கங்களையும் கேட்டுகொண்டது.
நமது மாவட்டம் சார்பாக முதலில் ரூ. 3500ம், பின்பு ரூ.66,630ம் அனுப்பி வைத்தோம். இது போல், வந்த நிதி மற்றும் நிவாரண பொருட்கள் அனைத்தையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் மாநில சங்கம் கொண்டு சேர்த்துள்ளது.
புயலால் சீரழிக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சுமார் 2.35 லட்சம் மதிப்புள்ள பாய்,பெட்ஷீட், அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவைகளை மக்களிடம் வழங்கினர்.
அதே போல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்க ப்பட்ட 37 ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.4000 மதிப்புள்ள அரிசி, மளிகை பொருட்கள், சமையல் பாத்திரங்கள், பாய், கொசுவலை, கைலி, Tசர்ட், நைட்டி , துண்டு உள்ளிட்ட பொருட்கள் சுமார் 1.48 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது.
மாவட்ட சங்கம் கொடுத்த குறுகிய அவகாசத்தில், 09.12.2015 ஒரே நாளில், திறம் பட சமுக நல பணிகளில் ஈடுபட்ட கிளை சங்கங்களையும், மனித நேயத்துடன், உதவிய நல் உள்ளங்களுக்கும், மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
படங்கள் 1 படங்கள் 2 படங்கள் 3 படங்கள் 4