ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 78.2 சதவீத பஞ்சப்படி இணைப்பை உடனடியாக வழங்க வலியுறுத்தி, 22.12.2015 அன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துமாறு, மத்திய FORUM அறைகூவல் விடுத்திருந்தது. அதன்படி, நமது மாவட்ட FORUM சார்பாக இன்று 22.12.2015 மதியம் 12.30 மணி அளவில், கருப்பு பேட்ஜ் அணிந்து, பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் M . சண்முகசுந்தரம், மாவட்ட செயலர், AIBSNLEA தலைமை தாங்கினார் . தோழர்கள் M .R .தியாகராஜன், மாவட்ட செயலர், SNEA, C . பாலகுமார், மாவட்ட செயலர், NFTEBSNL,
E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150 ஊழியர்கள்/அதிகாரிகள் ( 20 பெண் தோழியர்கள் உட்பட) கலந்து கொண்டனர். முடிவில்,
தோழர் N . பாலகுமார், கிளை செயலர், BSNLEU, (GM அலுவலக கிளை) நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர் FORUM மற்றும்,
மாவட்ட செயலர், BSNLEU