TNTCWU மாவட்ட செயற்குழு நாமக்கலில், 20.12.2015 அன்று சிறப்பாக நடைப்பெற்றது. செயற்குழுவிற்கு, தோழர் K . ராஜன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். தோழர் ராஜேந்திரன் (அம்மாபேட்டை), அஞ்சலி உரை நிகழ்த்த, தோழர் நல்லுசாமி (நாமக்கல்) அனைவரையும் வரவேற்றார்.
அய்படு பொருட்கள் ஏற்புக்கு பின், TNTCWU மாநில உதவி செயலர் தோழர் M . செல்வம், செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்தார். தோழர் C . பாஸ்கர், மாவட்ட செயலர் அய்படு பொருள், செயல்பாடுகள், நடைப்பெற்ற இயக்கங்கள் உள்ளிட்டவையை விளக்கி தொகுப்புரை வழங்கினார்.
விவாதத்தில், தோழர்கள் ராஜேந்திரன் (அம்மாபேட்டை), ஜெயா (MAIN), சுரேஷ் (STR ), வெங்கடேசன் ( திருச்செங்கோடு), சஞ்சய் (சங்ககிரி), விஜயகுமார் (ராசிபுரம்) உள்ளிட்ட கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் பங்கு பெற்றனர்.
BSNLEU மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் கனகராஜ், தங்கராஜ், சண்முகம், ஹரிஹரன், கிளை செயலர்கள் தோழர்கள் ராமசாமி (நாமக்கல்), பாலகுமார் (GM அலுவலகம்), மாவட்ட சங்க நிர்வாகிகள் பன்னீர்செல்வம், வேலு, TNTCWU மாவட்ட பொருளர் தோழர் P . செல்வம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பின்னர், தோழர் E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU இன்றைய அரசியல் நிலை, BSNL நிலைமை, நடைபெற்ற இயக்கங்கள், ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள், உள்ளிட்ட விசயங்களை விளக்கி சிறப்புரை வழங்கினார்.
இறுதியாக, தோழர் A . விஜயகுமார், மாவட்ட உதவி தலைவர், TNTCWU நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
அமைதியான இடம், அன்பான உபசரிப்பு, சுவையான உணவு, ஆழமான விவாதம், முழுமையான பங்கேற்பு, என செயற்குழு சிறப்பாக இருந்தது பாராட்டுக்குரியது. மாவட்டம் முழுவதுளுமிருந்து சுமார் 110 ஒப்பந்த தொழிலாளர்கள், நிரந்தர ஊழியர்கள், முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பான ஏற்பாடுகள் செய்த TNTCWU மாவட்ட சங்கம், BSNLEU / TNTCWU நாமக்கல் கிளை சங்கங்களுக்கு பாராட்டுக்கள்.
கூட்டத்தில், சம்பளத்துடன் கூடிய வார ஒய்வு, பயணப்படி, குறைந்த பட்ச ஊதியம் ரூ.15,000, இலாக்க அடையாள அட்டை, Gr D காலி பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
ஊரகம் மற்றும் நகரம் ஒரே மாதிரியான Tender முறை கொண்டு வந்த நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கபட்டது,
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் :
01. வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை வழங்க உதவுவது.
02. 2016 ஜனவரி 1 முதல் ஒவ்வொரு ஒப்பந்த ஊழியரும் தலா 2 தரை வழி இணைப்புகள் பிடிப்பது.
03. புதிய உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் நடத்துவது.
04. 2016 பிப்ரவரிக்குள் கிளை மாநாடுகள் நடத்துவது.
05. 2015 டிசம்பர் வரை சந்தா உடனடியாக வசூலிப்பது, உரிய மட்டங்களுக்கு அனுப்புவது.
06. 2016 ஜனவரி மாதத்தில் சிறப்பு கூட்டம் நடத்துவது.
07. மாநில, மத்திய சங்கங்கள் அறைகூவல்களை வெற்றிகரமாக அமுல் படுத்துவது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்