இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலரும், AITUC சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலருமான தோழர் A.B. பரதன் தனது 92வது வயதில் புது டெல்லியில் உள்ள மருத்துவ மனையில் 02.01.2016 சனிக்கிழமை இரவு 8.13 மணிக்கு மரணமடைந்தார்.
1924ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி பிறந்த தோழர் பரதன் மகராஷ்டிரா மாநில சட்ட மன்றத்திற்கு 1957ம் ஆண்டு தேர்ந்தேடுக்கபட்டார். மக்கள் பிரச்சனைக்காக , சட்ட மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் சிறப்பாக வாதாடிய, போராடிய தோழர் பரதன் மறைவு இந்திய தொழிற் சங்க இயக்கத்திற்கும், உழைப்பாளி மக்களுக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவிற்கு சேலம் மாவட்ட சங்கம் தனது அஞ்சலியை உரித்தாக்குகிறது.
வருத்தங்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்