Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, January 3, 2016

வருமான வரிதுரையிடமிருந்து BSNL 10,000 கோடி ரூபாய் நிதி திரும்ப பெற உள்ளது

Image result for indian rupees bundle


விரைவில், BSNL நிறுவனம் 10,000 கோடி ரூபாய், வருமான வரி துறையிடமிருந்து, திரும்ப பெற உள்ளது. புத்தாண்டு வாழ்த்து சொல்ல சென்ற போது, BSNL CMD, நமது பொது செயலரிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். 

வருமான வரி துறை BSNL நிறுவனத்திடமிருந்து, சுமார் 10,000 கோடி ரூபாய் அதிகமாக வரி வசூல் செய்துள்ளது. காரணம், DoT நமது வரவு செலவை 15 ஆண்டுகளாக முழுமையாக தணிக்கை செய்யவில்லை. 

இரண்டு நாள் வேலை நிறுத்த சமயத்தில், குறிப்பாக, 01.05.2015 அன்று DoT செயலருடன் நடைப்பெற்ற பேச்சு வார்த்தையில், FORUM சார்பாக ஏற்கனவே நாம் இந்த கோரிக்கையை வலியுறுத்தினோம். 

முதல் தவணையாக 891 கோடி ரூபாய் BSNL பெற உள்ளது என நமது CMD தகவல் தெரிவித்தார்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 

ஆதாரம்: மத்திய சங்க இணையம்