Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, January 23, 2016

FORUM சார்பாக MAIN தொலைபேசி நிலையத்தில் 2 நாள் மேளா



சேலம் மாவட்ட FORUM முடிவின் அடிப்படையில், சேலம் MAIN தொலைபேசி நிலையத்தில், 21.01.2016 & 22.01.2016 இரண்டு நாள் "மேளா" நடத்தப்பட்டது. 21.01.2016 அன்று 310 சிம் கார்டுகளும், 22.01.2016 அன்று 417 சிம் கார்டுகளும் (55 MNP ) உட்பட, விற்பனை ஆகியுள்ளதாக தெரிகிறது. இது போக, 10 புதிய தரை வழி இணைப்புகள், 6 பிராட் பேண்ட் இணைப்புகள் கிடைத்துள்ளது. 

இரண்டு நாட்களும், நமது மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் C. செந்தில்குமார், M . பன்னீர் செல்வம், கிளை சங்க நிர்வாகிகள் தோழர்கள் காளியப்பன், சந்திரன், வரதப்பன், புகழேந்தி ஆகியோர் முழுமையாக கலந்து கொண்டனர். 

FORUM சார்பாக மேளாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்