08.01.2016 அன்று நடைப்பெற்ற மாவட்ட FORUM கூட்டத்தில், அனைத்து பகுதிகளிலும் "STAFF MEET" கூட்ட நிர்வாகத்தை கோருவது, அதில் FORUM தலைவர்களும் கலந்து கொள்வது என்பது ஒரு முக்கியமான முடிவாகும்.
அதன் அடிப்படையில், இன்று (11.01.2016) மெய்யனுர் தொலைபேசி நிலையத்தில், "STAFF MEET" நடைபெற்றது.
கூட்டத்திற்கு திரு. தங்கவேல், DGM (CM ) அவர்கள் தலைமை தாங்க, திருமதி. ஆஷா, DGM (TR ), திரு. பாஸ்கரன், கோட்ட பொறியாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
FORUM சார்பாக, தோழர்கள் E . கோபால்,(BSNLEU), C. பாலகுமார் (NFTEBSNL), M . சண்முகசுந்தரம் (AIBSNLEA ), G . சேகர் (SNEA ) ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
திரளான ஊழியர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், 13.01.2016 அன்று மெய்யனுரில் "மேளா" நடத்துவது, புதிய NPC , BB இணைப்புகள் பெறுவது, மறு இணைப்பு பெற கூடுதல் கவனம் செலுத்துவது, அதிகபடியான சிம் விற்பனைக்கு உதவுவது, நமது மாவட்டத்தை லாபகரமான மாவட்டமாக மாற்ற கடுமையாக உழைப்பது என்பது முக்கிய முடிவுகளாகும்.
இறுதியாக, திரு. அர்த்தநாரி, SDE நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர், FORUM மற்றும்
மாவட்ட செயலர், BSNLEU