சேலம் மாவட்ட FORUM முடிவின்படி, சேலத்தில், 13.01.2016 அன்று "டூ வீலர் ஜாதா" சென்று, மெய்யனுரில் "மேளா" நடத்தப்பட்டது.
FORUM அமைப்பில் உள்ள மாவட்ட செயலர்கள் தோழர்கள் E . கோபால், (BSNLEU), C . பாலகுமார், (NFTEBSNL), M .R .தியாகராஜன், (SNEA), M . சண்முகசுந்தரம், (AIBSNLEA) முன்னிலை வகிக்க, மெயின் தொலைபேசி நிலையத்தில் துவங்கி, பழைய பேருந்து நிலையம், 4 ரோடு, புதிய பேருந்து நிலையம், 5 ரோடு வழியாக பேரணி மெய்யனுர் சென்றடைந்தது.
மெய்யனுரில் DGM (HR /Admn ) திருமதி. R . உமா முறைப்படி "மேளாவை" துவக்கி வைத்தார். துணை பொது மேலாளர்கள், திருவாளர்கள் தங்கவேல், DGM (CM ), செல்வம், DGM (CFA), திருமதி. ஆஷா, DGM (TR ), திரு. K . கோவிந்தராஜன், AGM (CSC ), திரு. C . கந்தசாமி, AGM(HR /Admn ) திரு. M . பாஸ்கரன், கோட்ட பொறியாளர் ஆகியோர் முதல் விற்பனையை துவக்கி வைத்தனர்.
மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் S . தமிழ்மணி, (BSNLEU), G . வெங்கட்ராமன் (NFTEBSNL ), மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் M . சம்பத் (SNEA ), S . சின்னசாமி, (NFTEBSNL ), S . ஹரிஹரன், (BSNLEU ), M . பன்னீர் செல்வம், (BSNLEU ), G . சேகர் (SNEA ) உள்ளிட்ட தோழர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். இறுதியாக, திரு. K . கோவிந்தராஜன், AGM (CSC) நன்றி கூறினார்.
741 சிம் கார்டுகள், 50 புதிய தரை வழி இணைப்புகள், 33 பிராட் பேண்ட் இணைப்புகள் இரண்டு நாள் மேளாவில் விற்பனை ஆகியுள்ளது பாராட்டுக்குரியது.
தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர், FORUM மற்றும்
மாவட்ட செயலர், BSNLEU