Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, February 15, 2016

138 தோழர்கள் ஊதிய முரண்பாடு - நிர்வாகத்துடன் சந்திப்பு

Image result for RECOVERY

நமது சேலம் மாவட்டத்தில் 1993, 1994, 1995 ஆகிய ஆண்டுகளில், RM மற்றும் Group D பதவிக்கு பணி நியமனம் பெற்று, 1998-ம் ஆண்டு TM பதவி உயர்வுக்கான தேர்வு எழுதி, தேர்ச்சிப் பெற்ற தோழர்களுக்கு நமது மாவட்டத்தில் TM பதவிகள் (Post) இல்லாத காரணத்தினால் தற்காலிகமாக (1998 முதல் 2000 வரை) இரண்டு ஆண்டுகளுக்கு LM ஊதியம் மற்றும் LM மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கப்பட்டது.

ஊதியப் பட்டியல்... 
RM ஊதியம்: 2550-55-2660-60-3200
LM ஊதியம்: 2750-70-3800-75-4400
LM மேம்படுத்தப்பட்ட ஊதியம்: 3050-75-3950-80-4500
TM ஊதியம்: 3200-85-4900

தற்காலிகமாக LM ஊதியம் வழங்கப்பட்ட, TM தேர்ச்சி பெற்ற, தோழர்களுக்கு 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும்  செப்டம்பர் மாதங்களில், TM பதவிகள் (Post) உருவாக்கப்பட்டு, TM பதவி உயர்வு வழங்கப்பட்டு, அதற்கான ஊதியம் பொருத்தம் (Pay fixation) செய்யப்படும் போது, RM ஊதியத்தில் இருந்து TM ஊதியம் பொருத்துவதற்கு பதிலாக, தற்காலிகமாக தந்த LM ஊதியத்தில் இருந்து TM ஊதியம் பொருத்தியது DOT துறை CCA பிரிவால்(DoT Cell) கண்டறியப்பட்டு இதை சரி செய்திட வலியுறுத்தப்பட்டது.

இந்த தவறான ஊதியம் பொருத்தியதின் (Pay fixation) காரணமாக, 138 தோழர், தோழியர்களுக்கு (2000 முதல் ஜனவரி 2016 வரை) தோராயமாக ஒரு லட்சம் வரை (அ) ஒரு லட்சத்திற்கு மேல் நிலுவை பிடித்தமும் மற்றும் 2016 பிப்ரவரி மாதத்தில் இருந்து சரியான ஊதியம் பொருத்துவதால் (Actual Pay fixation) ஊதியக் 
குறைப்பும் வருகிறது.

DOT Cell வழிகாட்டுதல் படி 2016 பிப்ரவரி மாத ஊதியத்தில் நிலுவை பிடித்தமும் மற்றும் ஊதிய குறைப்பும் செய்திட நிர்வாகம் முடிவு எடுத்திருந்தனர்.  

08-02-2016 அன்று BSNLEU மற்றும் NFTEBSNL சங்கங்கள் சார்பாக, BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால், BSNLEU GM அலுவலக கிளை செயலர் தோழர் N . பாலகுமார், NFTEBSNL மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார் மற்றும் மாநில அமைப்பு செயலர் தோழர். G.வெங்கட்ராமன் ஆகியோர் மாவட்ட துணைப்
பொது மேலாளர் (நிதி) திரு. P.மணி, மாவட்ட துணைப் பொது மேலாளர் (நிர்வாகம்) திருமதி. உமா ஆகியோரை சந்தித்து, நிர்வாகத்தின் தவறான ஊதிய பொருத்துதளினால் (Pay fixation) 
ஏற்பட்ட நிலுவை பிடித்தத்தை ஏற்க முடியாது என தெரிவித்தோம். 

மேலும், இப்பிரச்சனையை மாநில சங்கத்தின் மூலமாக (வேலூர் மாநில செயற்குழு) மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு மற்றும் வழிகாட்டுதல் வரும் வரை நிலுவை பிடித்தம் செய்திட வேண்டாம், என கோரினோம். 

நமது கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் ஏற்று கொண்டுள்ளது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்